கோவையில் இருந்து துபாயிக்கு நேரடி விமான சேவை வழங்க வலியுறுத்தி எம்.பி. ஆ. ராசா மனு

டெல்லி : கோவையில் இருந்து துபாய், கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள நகரங்களுக்கு நேரடி விமான சேவை வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து நீலகிரி எம்.பி. ஆ. ராசா மனு அளித்தார்.

டெல்லி : கோவையில் இருந்து துபாய், கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள நகரங்களுக்கு நேரடி விமான சேவை வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து நீலகிரி எம்.பி. ஆ. ராசா மனு அளித்தார். 



கோவை விமான நிலையத்திற்கு சர்வதேச விமான சேவைகள் வழங்கப்படாமல் புறக்கணிப்பதாகவும், விமான சேவை கோரி அளிக்கப்பட்ட அறிக்கைகள் நிலுவையில் போடப்பட்டுள்ளதாகவும் அண்மையில் மக்களவையில் நீலகிரி எம்.பி. ஆ. ராசா பேசினார். இந்த நிலையில், டெல்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியை எம்.பி. ஆ. ராசா நேரில் சந்தித்தார். அப்போது, சந்தித்து கோவை விமான போக்குவரத்து விரிவாக்கம் குறித்து மனு அளித்தார். 

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :- மக்கள் தொகை அதிகம் உள்ள நகராக தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் 2-வது இடத்திலும், தேசிய அளவில் 16-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், டெக்ஸ்டைல்ஸ், கார்மென்ட்ஸ், நகைப்பட்டறை, கிரைண்டர், மெஷின் உதிரி பாகங்கள், ஆட்டோ உதிரி பாகங்கள் உள்ளிட்ட வர்த்தகம் அதிகளவில் இருக்கும் கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டராகவும் உள்ளது. 



கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் கூட வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். 

இந்த சூழலில், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் துபாய், கோலாலம்பூர் மற்றும் பேங்காக் போன்ற நகரங்களுக்கு நேரடி விமான சேவை இல்லாததால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கோவையில் இருந்து சென்று டெல்லி அல்லது சென்னை போன்ற வேறு விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதால், பயண நேரம் மற்றும் பணம் வீணாக செலவாகிறது. எனவே, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் ஆய்வின் அடிப்படையில், விரைவில் நேரடி சர்வதேச விமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், கோவை மட்டுமில்லாது, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலத்தவர்களும் பயனடைவார்கள், எனத் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...