கோவை மாநகராட்சியின் பழைய வார்டுகளில் குடிநீர் பிரச்சனை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்தது சூயஸ்

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பழைய 60 வார்டுகளில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை சூயஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பழைய 60 வார்டுகளில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை சூயஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணிநேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கோவை மாநகராட்சியுடன் சூயஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒப்பந்தத்தின்படி பணிகளை சூயஸ் நிறுவனம் மெதுவாக தொடங்கியது. அதேவேளையில், குழாயில் தண்ணீர் கசிவு, குழாய் சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார்களை தெரிவிக்கவும் வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, ஆர்.எஸ். புரம் பகுதியில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அநேகமாக, வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



இந்த நிலையில், ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் 9865060708 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் புகைப்படத்துடன் கூடிய புகாரை தெரிவித்திருந்தனர். அதன்பேரில், சூயஸ் நிறுவனம் உடனடியாக ஊழியர்களை அனுப்பி பிரச்சனையை குறைந்த நேரத்தில் சரிசெய்ய உத்தரவிடப்பட்டது. 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பழைய 60 வார்டுகளில் உள்ள குடியிருப்புவாசிகள், 24 மணிநேர குடிநீர் திட்டப் பணிகளில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான புகார்களை மேற்கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் அனுப்பலாம். மேலும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...