கோவை : மீன் பிடிக்க அனுமதி விரைவாக வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வலைவீசி மீனவர்கள் மனு அளித்தனர்.

கோவையில் உள்ள 12 குளங்கள் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளங்களில் மீன் பிடிக்கும் பணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக வருடந்தோறும் மாநகராட்சிக்கும், நகராட்சிகளுக்கும் மீனவர்கள் குத்தகை பணம் செலுத்தி மீன் பிடிக்கும் உரிமையை பெற்று வந்தனர். இந்த நிலையில், இவ்வாண்டிற்கான குத்தகை பணத்தை பொதுப்பணித்துறை இதுவரை பெறாமல் இருப்பதாகவும், இதனால் மீன்பிடிக்கும் தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறி 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர்.
அனுமதி வழங்கப்படாமல் இருப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர்கள், உடனடியாக குத்தகை தொகையை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், தங்களுடன் கொண்டு வந்திருந்த வலையை தரையில் விரித்து மீன் பிடிப்பது போல் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.