கோவை அரசு மருத்துவமனையின் முதல்வரிடம் மனித உரிமைகள் ஆணையம் திடீர் விசாரணை

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை, அவதூறாகப் பேசி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை, அவதூறாகப் பேசி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தலைமை மருத்துவராக கஜேந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் விபத்து பிரிவுக்கு மாற்றியதாக தெரிகிறது. அவசர சிகிச்சை பிரிவிற்கு இவரை விட ஜூனியரை பணியமர்த்தியதால், மீண்டும் தன்னை அவசர பிரிவிற்கு மாற்ற வேண்டும் என முதல்வர் அசோகனிடம் கஜேந்திரன் விண்ணப்பித்தார். அப்போது, முதல்வர் அசோகன் அதை நிராகரித்ததோடு, கஜேந்திரனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கஜேந்திரன் அனுமதி வாங்கி விடுப்பில் சென்றுள்ளார். 



ஆனால், இந்திய மருத்துவ ஆணையத்திற்கு இது தொடர்பாக முதல்வர் அசோகன் புகார் அளித்து, அவரை இடமாறுதல் செய்துள்ளார். மேலும் அவரது பணியிடத்திற்கு வேறு மருத்துவரை நியமித்துள்ளார். இதனால் கடந்த 8 மாதமாக பணியிடம் இன்றி மருத்துவர் கஜேந்திரன் இருந்துள்ளார். இந்நிலையில் தன்னை அவதூறாக பேசியதோடு, பலி வாங்கும் நோக்கில் செயல்பட்ட அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஜேந்திரன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...