கோவை : மேட்டுப்பாளையத்தில் முற்றிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்காக நடத்தப்படும் புத்தக கண்காட்சி இன்று முதல் தொடங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியின் சார்பில் 15-வது ஆண்டு புத்த கண்காட்சி இன்று முதல் துவங்கியது. முற்றிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக மட்டுமே நடத்தப்படும் இந்த கண்காட்சியினை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் மற்றும் கவிஞர் கவிதாசன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 30க்கும் மேற்பட்ட அரங்களில் 5 பதிப்பகங்களை சேர்ந்த சுமார் 25,000 புத்தகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பள்ளி பாட புத்தங்கள் மட்டுமின்றி சிறுகதைகள், ஆன்மீகம், விளையாட்டு,பொதுஅறிவு, உலக தலைவர்களின் புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கபட்டுள்ளன. இன்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இந்த கண்காட்சியில் இடம் பெற்ற புத்தகங்களை பார்வையிட்டனர்.

“மூன்று நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி பயனடையலாம். பள்ளி பாடங்கள் மட்டுமின்றி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் இந்த புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது,” என நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.