திருப்பூர் : பல்லடம் அருகே உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஐம்பொன் சிலையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற நாராயணி பீடம் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், இக்கோவிலில் நாராயணி அம்மனின் சிலை ஐம்பொன்னால் வேண்டுதல் காரணமாக நன்கொடையாக கோயிலுக்கு வழங்கப்பட்டது. இந்த சிலையின் மதிப்பு இரண்டரை லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலியை துளைத்துக்கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் சிலையை திருடி சென்றுள்ளனர்.
இதையடுத்து, இக்கோவிலின் பூசாரி செந்தில் முருகன் பல்லடம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, போலீசார் கோவில் பூசாரி உட்பட அப்பகுதியில் உள்ள பல்வேறு நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.