கோவை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 15, 17 மற்றும் 20 ஆகிய வார்டுகளில் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 15, 17 மற்றும் 20 ஆகிய வார்டுகளில் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 20-வது வார்டுக்குட்பட்ட சீரநாயக்கன்பாளையத்திலுள்ள நாய்கள் காப்பகத்தில் போதுமான வசதிகள் உள்ளனவா..? என்பது குறித்தும், 15-வது வார்டு பி.கே.புதூர் பகுதியிலுள்ள மாநகராட்சி நகர்நல மையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பது பற்றியும் அய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பி.கே.புதூர் பகுதியில் ரூ. 49.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நகர்நல மையம் கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



பின்னர், 17-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள பழைய குப்பைக்கிடங்கு வளாகத்தில் தோட்டக்கழிவுகள், மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளையும், பழைய குப்பைக் கிடங்கு பகுதியில் புல் மேடுகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். 



இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...