கோவையில் கிணற்றில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் : உறவுக்கார வாலிபர் கைது

கோவை : கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் தொடர்பாக உறவுக்கார வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர்.


கோவை : கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் தொடர்பாக உறவுக்கார வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர். 

அன்னூர் கரியகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கனகராஜ் மற்றும் காஞ்சனா. இவர்கள் விளாங்குறிச்சியில் உள்ள குப்புராஜ் என்பவரது தோட்டத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. நேற்றுமுன்தினம் (ஜுன் 23) இரவு வழக்கம் போல உணவருந்தி விட்டு உறங்கச் சென்று விட்டனர். மேலும், வீட்டிற்கு வந்த உறவினர்களும் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து இருந்தனர். இந்த நிலையில், மறுநாள் காலை சுமார் நான்கரை மணியளவில் குழந்தையைக் காணாததைக் கண்டு தீவிரமாக தேடியுள்ளனர். அப்போது, வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கருவேலங் காட்டுப்பகுதியில் தேடிய போது பாழடைந்த கிணற்றில் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சடலத்தை மீட்ட போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாய் காஞ்சனாவின் பெரியப்பா மகனான ரகுநாத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்த ரகுநாத் சிறுமியிடம் பாலியல் ரீதியான உறவு வைக்க முயற்சி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமி சத்தம் போட்டதையடுத்து வாயைப் பொத்தி கொண்டு சென்று ரகுநாத் சிறுமியை உயிரோடு கிணற்றில் வீசி உள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...