கோவையில் சர்ச்சைக்குரிய விளம்பரம் வெளியிட்ட ஒயோ சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கு அதிகாரிகள் சீல்

கோவை : கோவையில் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என விளம்பரம் செய்த ஒயோ சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.


கோவை : கோவையில் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என விளம்பரம் செய்த ஒயோ சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். 

நவ இந்தியா பகுதியில் ஒயோ என்ற சர்வீஸ் அபார்ட்மெண்ட் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விளம்பரத்தை சுட்டிக் காட்டி, இது சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் வகையில் இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும் வகையில் இருப்பதாகக் கூறி, அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி தெற்கு வட்டாட்சியர் தேவனாதன் தலைமையிலான அதிகாரிகள் ஒயோ அபார்ட்மெண்டிற்கு அதிரடியாக சீல் வைத்தனர். இந்த நடவடிக்கைக்கு மாதர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...