போலீஸ் பாதுகாப்புடன் நீலகிரியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் வருவாய் துறையினர் தீவிரம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம், டி.டி.கே. சாலை போன்ற ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம், டி.டி.கே. சாலை போன்ற ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குன்னூர் பேருந்து நிலைய பகுதி மற்றும் டி.டி.கே. சாலை போன்ற பகுதிகளில் உள்ள 43 கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீர்நிலைகளில் மாசு என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருவாய் துறையினர் சார்பில் தொடர்ந்து கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை முதல் இந்தக் கடைகளை ஜே.சி.பி. வாகனம் மூலம் அகற்றும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



டி.டி.கே. சாலை ராணுவ மையத்திற்கு செல்லும் முக்கிய சாலை என்பதாலும், இந்த சாலையில் உள்ள அக்கிரமிப்புக் கடைகளால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் ராணுவ மையத்திற்கு செல்லும் போது சிரமம் ஏற்படுவதாக குன்னூர் ராணுவம் தரப்பில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.



இதே போன்று, பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும், இதனை ஒட்டி ஓடும் ஓடை மாசுபடாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...