ஆர்.எஸ்.புரம் பகுதியில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் : பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு

கோவை : ஆர்.எஸ்.புரம் அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை : ஆர்.எஸ்.புரம் அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் இயங்கி வரும் மோசன் கணினி பயிற்சி பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை 7.30 மணியளவில் பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவி அமிர்தாவை (20), சுரேஷ் (22) என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். அப்போது, சக மாணவர்கள் சுரேஷை தடுத்துள்ளனர். இருப்பினும், மாணவி அமிர்தா மற்றும் இரு மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர், மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அருகில் இருந்த பொதுமக்கள் சுரேஷை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 



இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்த போது, இருவரும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கல்லூரி காலத்தில் காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. இருவருக்கும் இடையே காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் அமிர்தா, சுரேஷிடம் பழகுவதை தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சுரேஷ் இன்று அமிர்தாவை கொலை செய்யும் நோக்கில் கத்திப்போன்று கூரிய ஆயுதத்தில் குத்தியுள்ளார். மேலும், சுரேஷ் வேலை பார்த்து வந்த இடத்தில் அமிர்தாவை கொலை செய்வதற்கு என்றே கத்தி போன்ற கூரிய ஆயுதத்தை தயார் செய்தது தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...