தமிழகத்தில் 2019-ம் வருடத்திற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

எதிர்வரக்கூடிய 2019-ம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான (ஜுன் முதல் செப்டம்பர் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து, ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணிணி கட்டமைப்பைக் கொண்டு 2018-ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் 60 சதவிகித வாய்ப்பிற்கான மழையளவு கீழே தரப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரி மழையளவைக் காட்டிலும் +1 முதல் +10 சதவிகித வேறுபாடு எதிர்பார்க்கப்படும் இடங்கள் கன்னியாகுமரி, திருநேல்வேலி, தேனி, சிவகங்கை, திருச்சி, கடலூர் மற்றும் நீலகிரி.

சராசரி மழையளவைக் காட்டிலும் +1 முதல் +5 சதவிகித வேறுபாடு எதிர்பார்க்கப்படும் இடங்கள் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் நாமக்கல்.

சராசரி மழையளவைக் காட்டிலும் +5.1 முதல் +10 சதவிகித வேறுபாடு எதிர்பார்க்கப்படும் இடங்கள் கோவை, சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம்.

சராசரி மழையளவைக் காட்டிலும் +10.1 முதல் +15 சதவிகித வேறுபாடு எதிர்பார்க்கப்படும் இடங்கள் விருதுநகர், கரூர், ஈரோடு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை.

சராசரி மழையளவைக் காட்டிலும் +15.1 முதல் +20 சதவிகித வேறுபாடு எதிர்பார்க்கப்படும் இடங்கள் இராமநாதபுரம், திருவாரூர், திருப்பூர் மற்றும் தர்மபுரி.

சராசரி மழையளவைக் காட்டிலும் +20.1 முதல் +25 சதவிகித வேறுபாடு எதிர்பார்க்கப்படும் இடம் தூத்துக்குடி.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...