கோவை : தாயின் தகாத உறவுக் காதலனால் அடித்து கொல்லப்பட்டு சரவணம்பட்டி அருகே உள்ள முட்புதரில் 3 வயது சிறுமியின் உடல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படை அமைத்துள்ளனர்.

கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் ரூபினி தம்பதிகளின் மகள் தேவிஸ்ரீ (3). இந்த சிறுமி இன்று காலை சரவணம்பட்டி கரட்டுமேடு அருகே உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். மேலும், சிறுமியின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருந்தன. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் தாயாருக்கு தமிழ்ச்செல்வன் என்பவருடன் தகாத உறவு இருந்து வந்தது தெரிய வந்தது. மேலும், நேற்று சிறுமியின் தாயாரும், தகாத உறவுக் காதலனுமான தமிழ்ச்செல்வனும் குழந்தையை வெளியே அழைத்து சென்ற நிலையில், அவர் சிறுமியை தனியே அழைத்துச் சென்று அடித்து கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, சிறுமியின் தாயாரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் தகாத உறவுக் காதலன் தமிழ்ச்செல்வனை கைது செய்ய தீவிரம் காட்டியுள்ளனர்.
மேலும், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை குழுவினர்கள் ஆய்வாளர் காந்தி, உதவி ஆய்வாளர்கள் பாரதிராஜா, அய்யாசாமி ஆகியோர் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.