உக்கடம் மீன் மார்க்கெட்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு : சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு கொள்ளையனுக்கு வலைவீச்சு

கோவை : உக்கடம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் பெண்ணிடமிருந்து சங்கிலி பறித்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை : உக்கடம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் பெண்ணிடமிருந்து சங்கிலி பறித்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். 



உக்கடம் அருகே உள்ள லாரி பேட்டையில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மீன்கள் வாங்க வருவது வழக்கம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை முதல் மதியம் வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மீன் மார்க்கெட்டிற்கு வருவர். இந்த நிலையில், ராமநாதபுரம் பகுதியில் வசித்து வரும் ரஞ்சிதம் என்பவர் மார்க்கெட்டிற்கு வரும்போது, மர்ம நபர் ஒருவர் திட்டமிட்டபடி அவரது கழுத்தில் இருந்து சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...