குன்னூரில் 2 நாட்கள் நடக்கும் பழக்கண்காட்சி இன்று தொடக்கம்

நீலகிரி : கோடை விழாவின் ஒருபகுதியாக குன்னூரில் 2 நாட்கள் நடக்கும் 61-வது பழக்கண்காட்சி இன்று தொடங்கியது.

நீலகிரி : கோடை விழாவின் ஒருபகுதியாக குன்னூரில் 2 நாட்கள் நடக்கும் 61-வது பழக்கண்காட்சி இன்று தொடங்கியது. 



நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் நிலவுகிறது. சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழா குன்னூரில் நடைபெறும் பழக்கண்காட்சியுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் கண்காட்சி 61-வது ஆண்டாக நடத்தப்படுகிறது. இந்த 61-வது பழக் கண்காட்சி இன்று தொடங்கி நாளை முடிவடைகிறது. பூங்காவின் நுழைவு வாயிலில் பழங்களால் ஆன வரவேற்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவினுள் நுழைவு வாயில் அருகில் ஒன்றரை டன் ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களைக் கொண்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலான வண்ணத்து பூச்சி, மாட்டு வண்டி, மயில் ஆகிய உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 



இந்தப் பழக் கண்காட்சியில் தீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையை தவிர கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, தேனி, தர்மபுரி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் கடலூர் ஆகிய வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறையினர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்கள் மாவட்டத்தின் சிறப்புகளை பழங்கள் மூலம் வடிவமைத்துள்ளனர். வழக்கமாக பழக்கண்காட்சியில் பழங்கள் அறுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். இதனால், பழங்கள் அதிக சேதம் ஏற்பட்டு வீணாகி வந்தது. இதனை தவிர்க்கும் விதமாக, இந்த ஆண்டு புதிய முறை கையாளப்படுகிறது. அதாவது, பழங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில், நூலில் பழங்களை கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...