பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சி.பி.ஐ.

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கோவை மாவட்ட போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. போலீசார், பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அதேபோல, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் வீடுகளில் ரகசியமாக சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் விரைவாக விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முடிவில் இறங்கினர். அதன்படி, இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், குற்றவாளிகள் குறித்த விரிவான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...