டிடிவி தினகரனை கைவிட்ட பொதுமக்கள் : மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த அ.ம.மு.க.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மிகவும் நெருக்கடியை அ.ம.மு.க. ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தலில் எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கி, மொத்த வாக்குகள் பெற்ற பட்டியலில் பா.ம.க.விற்கு அடுத்தபடியாக, 5-வது இடத்தைத்தான் அ.ம.மு.க. பிடித்தது. அதாவது, அந்தக் கட்சி பெற்ற மொத்த வாக்குகளோ வெறும் 4.82 சதவீதம் தான். குறிப்பாக, நடந்து முடிந்த தேர்தலில் வாக்குகளை பிரித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என அ.ம.மு.க. வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்த நிலையில், அக்கட்சி 22 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மிகவும் நெருக்கடியை அ.ம.மு.க. ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தலில் எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கி, மொத்த வாக்குகள் பெற்ற பட்டியலில் பா.ம.க.விற்கு அடுத்தபடியாக, 5-வது இடத்தைத்தான் அ.ம.மு.க. பிடித்தது. அதாவது, அந்தக் கட்சி பெற்ற மொத்த வாக்குகளோ வெறும் 4.82 சதவீதம் தான். குறிப்பாக, நடந்து முடிந்த தேர்தலில் வாக்குகளை பிரித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என அ.ம.மு.க. வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்த நிலையில், அக்கட்சி 22 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக, மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளிலும் சுயேட்சையாக போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் கூட பெறாதது, அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதோடு, 15 தொகுதிகளுக்கு குறைவான தொகுதிகளிலேயே அக்கட்சி 3-வது இடத்தை பிடித்துள்ளது. மறுபுறம், முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்திருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் 10 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. 

கோவை தொகுதியில் வெற்றியாளர்களுக்கும், தோல்வியடைந்தவருக்கும் இடைப்பட்ட வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த செயலையே டிடிவி தினகரன் மற்றும் அவர்களது கட்சியைச் சேர்ந்த 37 எம்.பி. வேட்பாளர்களிடையேயும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. 

குக்கர் சின்னத்தில் நின்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு, மக்களவை தேர்தலில் குக்கர் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இதுவே, டிடிவிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. மேலும், அவரது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் தரப்பினருக்கு பொதுவான சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கிப்ட் பாக்ஸ் சின்னம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், அக்கட்சியினரின் மந்தமான செயல்களினாலும், அ.தி.மு.க.விற்கு மீண்டும் தாவும் நடவடிக்கைகளினாலும் அக்கட்சிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. 

ஒருவேளை இடைத்தேர்தலில் 20 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் தினகரனின் அ.ம.மு.க. 3-வது இடத்தை பிடித்திருந்தால், ஆளும் அ.தி.மு.க.விற்கு தொங்கு சட்டசபையே அமைந்திருக்கும். 

இதனிடையே, அ.ம.மு.க. எதிர்காலத்தில் சிறப்பான நிலைக்கு வரும் என தோல்வி குறித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...