திருப்பூர் : தமிழகம் பெரியார் மண் என்பதால் மோடியின் வர்ணாசிரம மாயங்கள் எதுவும் எடுபடவில்லை என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கே.சுப்பராயன் தெரிவித்தார்.

திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் கே.சுப்பராயன் தபால் வாக்கு மற்றும் 26 சுற்றுகளின் முடிவில் 5,08,725 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தனை விட 93,368 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கே.எஸ்.பழனிசாமியிடம் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திருப்பூர் தொகுதியின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும் மக்களின் கருவியாக நாடாளுமன்றத்தில் போராடுவேன். வாதாடி பெற்றுத்தருவேன். தொகுதிக்கான நிதியில் கமிஷன் அடிக்கும் முறையினை ஒழித்து தொகுதிக்கான நிதியினை தொகுதிக்கே பயன்படுத்தும் வகையிலான செயல்படுவேன். எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்லாது வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி. ஒட்டுமொத்த மக்களின் குரலாய், தொகுதி முழுமைக்கும் குரல் கொடுப்பேன். தமிழகம் பெரியார் மண் என்பதால் மோடியின் வர்ணாசிரம மாயங்கள் எதுவும் எடுபடவில்லை, என்றார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 12 பேர் போட்டியிட்ட நிலையில், அ.தி.மு.க., சி.பி.ஐ. தவிர அனைவரும் டெபாசிட் இழந்தனர்.