சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் : 4,801 வாக்குகள் முன்னிலையில் கந்தசாமி

கோவை : சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 19-வது சுற்றின் முடிவில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. 4,801 வாக்குகள் மட்டுமே முன்னிலையில் உள்ளது.


கோவை : சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 19-வது சுற்றின் முடிவில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. 4,801 வாக்குகள் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 

சூலூர் தொகுதிக்கு கடந்த 19-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 79.41 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையுடன், சூலூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, 19-வது சுற்று நிலவரப்படி, அ.தி.மு.க.வின் வேட்பாளர் கந்தசாமி 80,592 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி 75,791 வாக்குகளும் பெற்றுள்ளனர். அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் 14,311 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி 6,210 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் விஜயராகவன் 3,977 வாக்குகள் பெற்றுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 47.38 சதவீத வாக்குகள் பெற்று மறைந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...