கோவை : சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 17-வது சுற்றின் முடிவில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. 2,817 வாக்குகள் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
கோவை : சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 17-வது சுற்றின் முடிவில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. 2,817 வாக்குகள் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
சூலூர் தொகுதிக்கு கடந்த 19-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 79.41 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையுடன், சூலூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, 17-வது சுற்று நிலவரப்படி, அ.தி.மு.க.வின் வேட்பாளர் கந்தசாமி 71,436 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி 68,619 வாக்குகளும் பெற்றுள்ளனர். அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் 12,929 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி 5,871 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் விஜயராகவன் 3,698 வாக்குகள் பெற்றுள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 47.38 சதவீத வாக்குகள் பெற்று மறைந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.