நீலகிரி : நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் 11-வது சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளரை விட தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா சுமார் 13 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
நீலகிரி : நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் 11-வது சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளரை விட தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா சுமார் 13 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில், நீலகிரி தொகுதியில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்பட சுயேட்சைகளும் போட்டியிட்டுள்ளனர். அத்தொகுதியில் 73.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை உதகை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடந்து வருகிறது.
6-ம் சுற்று நிலவரப்படி, அ.தி.மு.க. வேட்பாளர் எம். தியாகராஜன் 17,991 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 30,443 வாக்குகள் பெற்று சுமார் 13,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் எம். ராமசாமி 1,926 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 2,208 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவிற்கு 1,057 வாக்குகள் கிடைத்துள்ளன. மேலும், 3,275 தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.