கோவை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில், கோவை தொகுதியில், பா.ஜ.க., சி.பி.எம்., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்பட சுயேட்சைகளும் போட்டியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான கோவை ஜி.சி.டி. கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடந்து வருகிறது.
4-வது சுற்று நிலவரப்படி, தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டுள்ள சி.பி.எம். கட்சியின் பி.ஆர். நடராஜன் 97,364 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 69,992 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளார். இருவரிடையே 27,372 வாக்குகள் வித்தியாசமாகும். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் 24,478 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கல்யாண சுந்தரம் 10,201 வாக்குகளும், அ.ம.மு.க வேட்பாளர் அப்பாதுரை 7,185 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவிற்கு 4,153 வாக்குகள் கிடைத்துள்ளது.