தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்பட சுயேட்சைகளும் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், 3-வது சுற்று நிலவரப்படி, தி.மு.க. வேட்பாளர் சண்முகநாதன், அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனை விட 18,563 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதாவது, தி.மு.க.வின் சண்முகநாதன் 80 438 வாக்குகளும், அ.தி.மு.க.வின் மகேந்திரன் 61,875 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை 7,238 வாக்குகளும், அ.ம.மு.க.வின் முத்துக்குமார் 4,903 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜா 4,591 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவிற்கு 2,405 பேர் வாக்களித்துள்ளனர்.