நாடு முழுவதும் நாளை வாக்கு எண்ணிக்கை : தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்

கோவை : வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்களுக்கு தேவையான தி.மு.க.வின் ஒரு சில கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.


கோவை : வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்களுக்கு தேவையான தி.மு.க.வின் ஒரு சில கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் தி.மு.க. சார்பில் சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதாவது,  வாக்கு  எண்ணிக்கையின் போது, வேட்பாளர்களின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விவிபேட் இயந்திரத்தின் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியை சரிபார்க்க முகவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், தி.மு.க.வின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.

முன்னதாக, ஃபார்ம் 17சி-க்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்து இருந்ததால், ஒவ்வொரு சுற்றிலும் பெறும் வாக்குகளை கணக்கிடுவதில் முகவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், “தலைமை தேர்தல் அதிகாரி ஃபார்ம் 17சி மற்றும் பென்சில் ஆகியவற்றை முகவர்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளார். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை சுற்றின் முடிவிலும், கார்பன் நகல் அல்லது ஜெராக்ஸ் நகல் முகவரிடம் வழங்கப்பட இருக்கிறது,” என்றார் தி.மு.க. ஒருங்கிணைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...