கோவை : எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான வாக்குப்பதிவை நடத்தி முடிக்கும் வகையில் கோவை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை : எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான வாக்குப்பதிவை நடத்தி முடிக்கும் வகையில் கோவை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு மற்றும் சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி வளாகத்தில் துணை ராணுவத்தினர், போலீஸார் என ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையின் கீழ் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள், காவலர்கள், ஆயுதப்படை போலீஸார், ஊர்காவல் படையினர் என 1,600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைபவர்கள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். உரிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். ஒரு வாக்காளுக்கு 16 முகவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முகவர்கள் 17சி படிவம், பேனா ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அரசு தொழில்நுட்பக் கல்லூரி முன்பு அரசியல் கட்சியினர் திரண்டுள்ளனர். எனவே, அங்கு போலீஸார் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.