கோவை : 2019-2020 கல்வி ஆண்டுக்கான பகுதிநேர பொறியியல் பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாக தொழிற்கல்வி இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை : 2019-2020 கல்வி ஆண்டுக்கான பகுதிநேர பொறியியல் பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாக தொழிற்கல்வி இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவையில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் செல்லதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், " வரும் 2019-2020 கல்வி ஆண்டுக்கான பொறியியல் (பி.இ., பி.டெக்.) பகுதிநேர பட்டப் படிப்புக்கு தற்போது விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோவை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, அரசினர் பொறியியல் கல்லூரி என மூன்று இடங்களிலும், இதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளான சேலம், வேலூர், பர்கூர், காரைக்குடி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
இதேபோல, ஆன்லைன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கான கலந்தாய்வு கோவை அவினாசி சாலையில் உள்ள கோவை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் மையத்தில் நடைபெற உள்ளது, எனக் கூறினார்.