மலர் கண்காட்சி நிறைவையொட்டி நீலகிரிக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை : மேட்டுப்பாளையம் வன சோதனைசாவடியில் வரிசையில் நிற்கும் வாகனங்கள்

நீலகிரி : உதகை மலர் கண்காட்சி நிறைவையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்லும் கன ரக வாகனங்களுக்கு மாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையம் வன சோதனை சாவடியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டுள்ளன.


நீலகிரி : உதகை மலர் கண்காட்சி நிறைவையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்லும் கன ரக வாகனங்களுக்கு மாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையம் வன சோதனை சாவடியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டுள்ளன.



நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக உலக புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை காண பல்வேறு மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகையை நோக்கி இயற்கை அழகினை ரசிக்க குவிந்து வருகின்றனர். இதனால், எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரியின் நுழைவு வாயிலாக இருக்கக் கூடிய மேட்டுப்பாளையத்தில் உள்ள சாலைகள் குறுகிய அளவில் உள்ளதால், சீசன் காலகட்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.



கடந்த 4 நாட்கள் நடைபெற்று வந்த மலர் கண்காட்சி இன்று நிறைவடைவதால் உதகை சென்ற சுற்றுலாப் பயணிகள் மாலையில் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதியும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் கல்லார் வனச்சோதனை சாவடியில் தடுத்து போக்குவரத்து காவல்துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கன ரக வாகனங்கள் இயக்கப்பட்டால், அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், காலை முதல் மாலை தடை செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் குறைந்த பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...