கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களை தூர்வாரும் பணி குறித்த தொழில்நுட்ப உதவிகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறையை அணுகியுள்ளது.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களை தூர்வாரும் பணி குறித்த தொழில்நுட்ப உதவிகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறையை அணுகியுள்ளது.
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம் மற்றும் சிங்காநல்லூர் குளம் என மொத்தம் 8 குளங்களை மறுசீரமைக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த குளங்களை சுற்றியுள்ள பொது இடங்களை மேம்படுத்தவும், பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளை சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை மையம், குளத்தின் மதகுகளை ஹைட்ராலிக் முறைப்படி அமைத்தல் போன்றவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, வாலாங்குளம், பெரியகுளம் மற்றும் செல்வசிந்தாமணி குளம் ஆகிய 3 குளங்களை மறுசீரமைக்க ரூ. 152 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த திட்டப் பணிகள் குறித்து கோவை மாநகராட்சியின் மூத்த அதிகாரி கூறுகையில், “8 குளங்களையும் 99 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்திருந்தாலும், அவை பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளவை. எனவே, அவர்கள் தொழில்நுட்ப பணிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். ஆதலால், குளங்களை மறுகட்டமைப்பு செய்ய அவர்களுடைய உதவியை கோவை மாநகராட்சி கேட்டுள்ளது. மேலும், பொதுத்துறையின் ஆலோசனைப்படி, ஹைட்ராலிக் முறை பொருத்தப்படும். அதோடு, அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், குளத்தில் எத்தனை ஆழத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்படும்,” எனக் கூறினார்.