கோவை : அரசு கேபிள் டி.வி நிறுவன வாடிக்கையாளர்கள் இணையதள மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்தின் மூலமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான பொதுமக்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் மூலமாக தான் விரும்பும் சேனல்களுக்கு அந்தந்த பகுதி முகவர் மூலமாக தொகை செலுத்தி சேனல்களை தேர்வு செய்து பார்த்து வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாம் தேர்ந்தெடுக்கும் சேனல்களுக்கான தொகையை முகவர்களிடம் செலுத்தி, தான் பார்க்கும் சேனல்களை தேர்வு செய்து பார்த்து வருகிறார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேனல்களை முகவர்களின் வங்கிக் கணக்கு மூலமாகவே புதுப்பிக்க முடியும் நிலை உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர், சேனல்களை பார்க்க இயலாதவர்கள், அதன் காலக்கெடுவிற்கு பின்னர் சேனல்களை பார்க்க இயலாத வகையில் துண்டிப்பு செய்யப்படுகிறது.
தற்போது, தமிழகம் முழுவதும் டிஜிட்டல் இந்தியா என்ற வகையில் இணையதளம் மூலமான மின்கட்டணம், பேருந்து கட்டணம், தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கான கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான சேவைகளுக்கான கட்டணங்கள் செல்போன் மூலமாகவும், இணையதளம் மூலமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், அரசு கேபிள் வாடிக்கையாளர்களும் மாதாந்திர சேவைக்கான கட்டணத்தை தங்களது வங்கி கணக்கில் இருந்து இணையதள மூலமாக கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.