கோவை : கோவையில் உள்ள பெரும்பாலான சிக்னல்கள் கடந்த சில நாட்களாக சரியாக இயக்குவதில்லை. காரணம், டிராபிக் மேலாண்மையில் நிலவி வரும் பெரும் பிரச்சனையே ஆகும். அதாவது, போக்குவரத்து சிக்னல்களுக்கான மின்சாரக் கட்டணம் செலுத்தாததே காரணமாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் போக்குவரத்து சிக்னல்களில் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மூலம் போக்குவரத்து சிக்னலுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களுக்கான போக்குவரத்து சிக்னல் பராமரிப்பு கட்டணத்தை தமிழக அரசு வழங்குவதில்லை.

கடந்த சில நாட்களாக விளம்பரப் பலகைகளின் மூலம் கிடைக்கும் வருமானங்களை வைத்து மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் சிக்னல்களுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்தி வந்தது. ஆனால், தற்போது அந்த வருமானம் தடைபட்டது. இந்த பிரச்சனை கோவை மாநகருக்கு மட்டுமல்ல. பல்வேறு நகரங்களிலும் நிலவி வருகிறது. இந்த நிலையில், கோவை மாநகரில் உள்ள சிக்னல்களுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் பொறுப்பை கோவை மாநகராட்சி எடுத்துக் கொண்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவையைச் சேர்ந்த போக்குவரத்து ஆர்வலர் கதிர்மதியோன் என்பவர் சிக்னல்களுக்கு அருகே விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விளம்பரப்பலகைகளை இனி வைக்கக் கூடாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சிக்னல்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், விளம்பரத்திற்கான உரிமத்தை இனி புதுப்பிக்கக் கூடாது என்றும், இதற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்த காலம் வரை விளம்பரப் பலகைகளை சிக்னல்களில் வைத்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் விளம்பரப் பலகைகள் அகற்றவில்லை. இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கோரி போக்குவரத்து ஆர்வலர் கதிர்மதியோன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அனைத்து விளம்பரப்பலகைகளையும் அகற்ற நீதிமன்றம், தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட கோவை மாநகராட்சி நிர்வாகம், கோவை மாநகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்களுக்கான மின்கட்டணத்தை செலுத்தி பராமரிக்கத் தானாக முன் வந்துள்ளது.
"போக்குவரத்து சிக்னல்களுக்கான மின்சேவை, வர்த்தக இணைப்பின் கீழ் தற்போது உள்ளது. விளம்பரதாரர்களின் உரிமம் பெற்றவர்கள் பிணையத் தொகை செலுத்தியிருப்பார்கள். அந்தத் தொகையை வைத்து நிலுவையில் உள்ள கட்டணத் தொகையை கழித்துக் கொள்ள மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், டிராபிக் சிக்னல்களுக்கான மின்சாரக் கட்டணத்தை தெருவிளக்குகள் போன்றவை அடங்கும் பொதுப் பயன்பாட்டு பிரிவின் கீழ் கொண்டு வந்தால், மின்கட்டணம் குறையும். விளம்பரதாரர்களிட்ம் இருந்து இந்த ஆண்டு முழுவதும் பிடிக்கப்பட்ட வரித் தொகையை, தற்போது பயன்படுத்த இருக்கிறோம். இதன்மூலம், சாலை பாதுகாப்பு மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாது. எனவே, கோவை மாநகராட்சி இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது," என்கிறார் கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார்.
இது குறித்து மூத்த காவல் அதிகாரி கூறுகையில், "கோவை மாநகர காவல் ஆணையராக ஏ.கே. விஸ்வநாதன் இருக்கும் போது இந்த பிரச்சனை எழுந்தது. பின்னர், உடனடியாக, உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, விளம்பரங்கள் மூலம் சாலை பாதுகாப்புக்கான போக்குவரத்து சிக்னல்களை பராமரிக்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இதுவரை கோவை மாநகராட்சி ஈட்டிய வரி வருவாய் தற்போது, பொது பயன்பாட்டிற்காக வந்துள்ளது. இந்தப் பிரச்சனை குறித்து கோவை மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தப்பட்ட நிலையில், உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது," என்றார்.
சராசரியாக சென்னை மாநகர் மட்டும் ரூ. 3.5 கோடி சிக்னல் பராமரிப்புக்காக செலவிடுகிறது, மாநிலம் முழுக்க சாலை பாதுகாப்புக்கான முதலமைச்சர் ரூ. 65 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இது போதுமானதான இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து துறை விளம்பர வருவாயை நம்பி மட்டுமே இருந்து வரும் நிலையில், தற்போது அதுவும் தடைபட்டுள்ளது.
கோவை மாநகர் முழுவதும் 62 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளது. அவற்றில் உயிர் தொண்டு நிறுவனத்தின் கீழ் பராமரிப்பிற்குள் இருக்கும் சிக்னல்களின் எண்ணிக்கையில் மேலும் 11 சிக்னல்களை சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அவிநாசி சாலையில் சி.சி.டி.வி மற்றும் ஏ.என்.பி.ஆர். வசதிகளைக் கொண்ட 5 நவீன போக்குவரத்து சிக்னல்களை சுமார் 5 கோடி செலவில் உயிர் தொண்டு நிறுவனம் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், "போக்குவரத்து சிக்னல்களுக்கான மின்கட்டண பொறுப்பை கோவை மாநகராட்சி எடுத்துக் கொள்ளும் வேளையில், மாநகர் முழுவதும் உள்ள சிக்னல்களுக்கான பராமரிப்பை உயிர் தொண்டு நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என மூத்த போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.