அரசியலில் புரட்சியை ஏற்படுத்தும் விதைகளாக இருக்கும் இளைஞர்கள் : சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு

கோவை : அரசியலில் புரட்சியை ஏற்படுத்தும் விதைகளாக இளைஞர்கள் இருப்பதாக சூலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை : அரசியலில் புரட்சியை ஏற்படுத்தும் விதைகளாக இளைஞர்கள் இருப்பதாக சூலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். ஜல்லிப்பட்டியில் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கிய அவர், செஞ்சேரிமலை, பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு மற்றும் சூலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.



இதனிடையே, பாப்பம்பட்டி பகுதியில் கமலின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள், அவர் வரும் போது பலத்த விசில் அடித்து, ஆராவாரத்துடன் வரவேற்றனர். அப்போது, தாமதமான வருகைக்கு மக்களிடம் அவர் மன்னிப்பு கோரினார்.



பொதுமக்களின் மத்தியில் வேட்பாளர் ஜி. மயில்சாமியை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன், ”அரசியலில் புரட்சியை ஏற்படுத்தும் விதைகளாக இளைஞர்கள் இருக்கின்றனர். இங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் கூட்டம் மக்கள் நீதி மய்யத்தின் வலிமையை காட்டுகிறது. அதோடு, இந்தக் கூட்டம் மற்ற ஊழல் கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்,” என்றார்.



தொடர்ந்து, சூலூரி அவர் பேசுகையில், “தமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியமில்லை. ஆனால், மற்ற அரசியல் கட்சிகள் வாக்குக்காக, மதுவிலக்கை அமல்படுத்துவதாக பொய்யான வாக்குறுதியை அளிக்கின்றனர். மக்கள் நீதி மய்யம் மதுபான பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கும். பெண்கள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய குறிக்கோளாகும். மக்கள் நீதி மய்யத்திற்கு ஆட்சி அதிகாரம் கொடுக்க வாக்களித்தால், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும், சூலூர் தொகுதியில் உள்ள நீர் நிலைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்படும். சூலூரில் உள்ள பிரச்சனைகள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு நன்கு தெரியும். மக்களுக்கு சேவை செய்ய இவரே சரியான நபர். இங்கு கூடியிருக்கும் கூட்டம் பணத்திற்கும், பாட்டிலுக்காகவும் கூடிய கூட்டமல்ல,” என்றார்.



இதனிடையே, சூலூர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் நாளை வெளியிடுகிறார். 

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...