பிரதமர் மோடியின் கையில் எடப்பாடி பழனிசாமி பத்திரமாக இருக்கிறார் : பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்த கே.எஸ்.அழகிரி கிண்டல்

கோவை : பிரதமர் மோடியின் கையில் முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரமாக இருக்கிறார் என சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கிண்டலடித்துள்ளார்.

கோவை : பிரதமர் மோடியின் கையில் முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரமாக இருக்கிறார் என சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கிண்டலடித்துள்ளார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பொங்கலூர். பழனிசாமியை ஆதரித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் ப. சிதம்பரம், மாநில தலைவர் அழகிரி ஆகியோர் கருமத்தம்பட்டி நான்கு வழி சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது,காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் அழகிரி பேசியதாவது:- தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. இது சந்தர்ப்பவாதமில்லாத இந்தியாவின் வளர்ச்சிக்கான கூட்டணி. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் எதிர் அணி இழுபறி நடத்தி கொண்டிருந்த போது, கூட்டணி வரலாற்றிலே இதுவரை இல்லாத வகையில் 3 மணி நேரத்தில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பலரது ஆலோசனையைப் பெற்று, அதன் பின்னரே தேர்தல் தயார் செய்யப்பட்டது. அந்த தேர்தல் அறிக்கையைக் தயாரித்தவர் பா.சிதம்பரம் தான். இந்த தேர்தல் அறிக்கையை பார்த்தவுடன் பா.ஜ.க.வின் வீழ்ச்சி துவங்கிவிட்டது. காங்கிரஸ் பேரியக்கம் எடுக்கும் முடிவுகள் ஒரு தனி மனிதன் எடுக்கின்ற முடிவில் இல்லை. மோடி அறிவித்த 500,1000 ரூபாய் செல்லாது என்று முன்னரே சொன்னாரா, சொன்னாரா..?. இதனால், நாட்டிற்கு நன்மை கிடைத்ததா?. பா.ஜ.க. மக்களுக்கு செய்த ஒரு சிறந்த காரியம் என்று ஒன்றுமில்லை.



60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் ஏன் இன்னும் ஏழ்மை ஒழியவில்லை என எங்களது காங்கிரஸ் தேசிய ரத்தம் ஓடுகின்ற குமரி ஆனந்தனின் மகள் தமிழிசை கேட்கிறார். உலகத்திலே எந்த நாட்டிலும் இவ்வளவு விரைவாக வறுமை ஒழிக்கப்படவில்லை. ஐந்தாயிரம் ஆண்டுகளாக இங்கு தீண்டாமை இருக்கிறது என்பதைக் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மத்தியில் விரைவாக வறுமையை ஒழித்துள்ளோம். மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், மோடி அதிகாரத்தைக் குவித்து வைத்துள்ளார். அ.தி.மு.க, ஜெயலலிதா இருந்தபோதோ, எம்.ஜி.ஆர். இருந்தபோதோ இருந்த இயக்கம் இப்போது இல்லை. இப்போது அந்த கட்சிக்கு சுயமரியாதையும் கிடையாது. மாநில உரிமைகள் குறித்த அக்கறையும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி இந்தியா மோடியின் கையில் பத்திரமாக இருக்கிறது என்று கூறுகிறார். வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம், மோடியின் கையில் எடப்பாடி பத்திரமாக இருக்கிறார், என்றார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...