இடைத்தேர்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் : கருமத்தம்பட்டியில் எ.வ.வேலு பிரச்சாரம்

கோவை : இடைத்தேர்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் என கருமத்தம்பட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பொங்கலூர். பழனிச்சாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்த இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

கோவை : இடைத்தேர்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் என கருமத்தம்பட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பொங்கலூர். பழனிச்சாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்த இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பொங்கலூர். பழனிச்சாமியை ஆதரித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் ப.சிதம்பரம், மாநில தலைவர் அழகிரி ஆகியோர் கருமத்தம்பட்டி நான்கு வழி சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, சூலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரான எ.வ. வேலு பேசியதாவது :- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பேச துவங்கும் முன்பு ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளை பேசி உரையை துவங்குவார். அங்கு தமிழ் நிமிர்ந்து நிற்கும். சூலூர் இடைத்தேர்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். 2004-ல் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. அப்போது, 40-க்கு 40-ம் வென்றோம். இப்போதும் 2019-ல் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இப்போதும் 40-க்கு 40-ம் வெல்வோம். மு.க.ஸ்டாலின் தான் முதன்முதலாக ராகுல் தான் பிரதமர் ஆக வர வேண்டும் என்று சொன்னார். வரும் 23-ம் தேதிக்கு பிறகு ராகுல்தான் பிரதமர். கொள்ளை கொள்ளையாக கொள்ளையடித்துள்ள இந்த ஆட்சியை மாற்ற உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.



2004-ல் கலைஞருடன் வாக்கு சேகரிக்க வந்திருந்த போது, சென்னாட்டு வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்தனர். அந்த வரி தள்ளுபடி செய்யபட்டது. சூலூர் தொகுதியில் தான் ஒன்னேகால் லட்சம் விசைத்தறி உள்ளது. இங்கு விசைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஜவுளி சந்தை அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து உள்ளனர். நீங்கள் நினைக்கின்ற ஆட்சி அமையும் பொழுது, மாநில அரசு மூலம் ஒரு குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். 



கோவை நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கையின்போது, தோழமை கட்சி தோழர் வெற்றி பெறுவார். தாங்கள் நேரிடையாக மக்களை சந்தித்து வருகிறோம். உள்ளாட்சி தேர்தலை நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த அமைச்சர் வேலுமணி தயாராக உள்ளாரா..?. தேர்தல் நடத்தப்பட்டால் அதிகாரம் உள்ளாட்சி தலைவர்களிடம் வந்து விடும் என்பதாலேயே காலம் கடத்தி வருகிறார். நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகளில் பொருத்தப்படும் எல்.இ.டி. பல்புகளின் விலை ரூ. 1,500. ஆனால், ரூ. 4,500-க்கு பில் போடுகின்றார். இவ்வாறாக தமிழகத்தில் கோடி கோடியாக கொள்ளையடித்துள்ளார். பண பலம் இங்கு வெல்லாது. எவ்வளவு செலவு செய்தாலும் தி.மு.க. இங்கு வெற்றி பெறும், என்றார்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...