சூலூர் தொகுதியில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாத சுமார் ரூ. 3 கோடி பறிமுதல்

கோவை : சூலூர் இடைத்தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக சுமார் ரூ. 3 கோடி ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை : சூலூர் இடைத்தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக சுமார் ரூ. 3 கோடி ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக, உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள், அந்தந்த தொகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டு, தொடர்புடைய கருவூலங்களில் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்களில் இன்றி ரூ. 10 லட்சத்திற்கும் மேல் கொண்டு செல்லப்பட்டால், அது வருமான வரித்துறையினரின் ஒப்படைக்கப்படும்.

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபின் கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரை எவ்வித ஆவணங்களுமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,98,90,920 கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில், ரூ. 2,00,350 விடிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும், கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...