அருந்ததியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த திட்டம் : சூலூரில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அதியமான் பிரச்சாரம்

கோவை : கருணாநிதி கொண்டு வந்த அருந்ததியின மக்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக சூலூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவித்தார்.

கோவை : கருணாநிதி கொண்டு வந்த அருந்ததியின மக்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக சூலூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவித்தார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிச்சாமியை ஆதரித்து ஆதிதமிழர் பேரவையின் தலைவர் அதியமான் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியான காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது :- 3 சதவீத இட ஒதுக்கீடு மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான அருந்ததியின மக்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக வந்துள்ளனர். 3 சதவீத இடஒதுக்கீடு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. 2 மாநிலம் கொண்டு வந்தும், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், கலைஞரால் கொண்டு வரப்பட்ட அந்த திட்டத்தை எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி மக்களுக்காக திட்டங்களை திட்டமிட்டுக் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். தற்போது, மு.க. ஸ்டாலின் 6 விழுக்காடு கொண்டு வர திட்டமிட்டுள்ளார். அப்படி வந்தால், தற்போது 80 பேராக மருத்துவர்கள் ஆவது, 160 பேராக வருவார்கள். 

நமது அருந்ததியின மக்களுக்கு தூய்மை தொழிலாளர் நல வாரியம், செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு தோல் நல வாரியம் அமைத்தார் கலைஞர். சுதந்திரப் போராட்ட வீரர் ஒட்டி வீரனுக்கு பாளையங்கோட்டையில் மத்தியில் அருந்ததியின வீரனுக்கு நினைவு மண்டபம் அமைத்துக் கொடுத்துள்ளார். கொங்கு வீரன் தீரன் சின்னமலையின் ஒற்றன் படை தளபதியாக இருந்தவர் பொள்ளான். அவருக்கு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நினைவு மண்டபம் அமைத்துத் தரப்படும் என்று கூறியுள்ளார். தளபதி சுற்றுப்பயணத்தின்போது, அருந்ததியின மக்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்கப்படும். சமுதாயக் கூடம் கட்டித்தரப்படும் என்று கூறியுள்ளார். தி.மு.க. அறிவித்த வாக்குறுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி 150 நாளாக மாற்றப்படும். 5 சவரன் தங்க நகையை வட்டியும் முதலும் சேர்த்து வழங்கப்படும். ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர் வேலை, 50 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்கள் 75 சதவீதம் நம் மக்களுக்காகத்தான் உள்ளது. 

8 வருடங்களாக ஆண்டு வரும் அ.தி.மு.க. எதாவது திட்டம் கொண்டு வந்தார்களா.?. இவர்களது ஒரே திட்டம் கொள்ளையடிப்பது தான். நம் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி எது என சுட்டிகாட்டத்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். மறக்காமல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். உதயசூரியன் சின்னம் தான் உழவர் சந்தை, பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பொங்கலூர் பழனிச்சாமியை வெற்றி பெற வையுங்கள், எனக் கூறினார். 

இதைத்தொடர்ந்து, குமாரபாளையம், பச்சார்பாளையம், நகரகளந்தை, மலைப்பாளையம், வங்கபாளையம், மூலனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். இந்தப் பிரச்சாரத்தின்போது, பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார், தேர்தல் பணி குழுவினர் ஸ்ரீதரன், தமிழரசு, முத்துகுமார், மல்லேஷ், வழக்கறிஞர் பெரியார்தாசன், ஈழவேந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...