பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை

கோவை : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி என்ற நோயாளி கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோவை : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி என்ற நோயாளி கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மற்றும் மனைவி சீதா. இவர்கள் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கோவில் திருவிழாவிற்கு தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, கோவிந்தசாமிக்கு திடீரென உடல்நிலை மோசமானதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இவர் ஆண்கள் பிரிவில் ஆஸ்துமா தொந்தரவுக்காக கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.



இந்த நிலையில் இன்று நீண்ட நேரம் படுக்கையில் கோவிந்தசாமியை காணவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த கோவிந்தசாமியின் மனைவி மற்றும் அருகில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் அவரை தேடினர். மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்தும் கோவிந்தசாமி கிடைக்கவில்லை. பின்னர் அங்குள்ள கழிவறையில் சென்று பார்த்தபோது அவர் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததைக் கண்டு அங்குள்ள நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...