கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் : ரூ. 15,000 அபராதம் விதிப்பு

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 250 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 250 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 12 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இருக்கிறதா..? என கோவை மாவட்டத்தில் உள்ள கடைகள், ஓட்டல்கள் என பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில், மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா மார்க்கெட்டில் தடையை மீறி பயன்படுத்தி வந்த 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதனைப் பயன்படுத்தி கடைக்காரர்களுக்கு ரூ. 15,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 44 வார்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 6 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ. 5,000 அபராதமாக விதிக்கப்பட்டது.



இது குறித்து மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், "கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துகின்றனரா..? என தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக மார்க்கெட் மற்றும் பூமார்க்கெட் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆனால், இன்று அண்ணா மார்க்கெட் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்டுபிடித்தோம். விதிகளை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக கோவை மாநகராட்சியின் சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது," என்றார்.



கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரையில் நடத்தப்பட்ட சோதனையில் 11,928 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக கடையின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. 11,23,810 ரொக்கம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...