கண்ணை கவரும் பூம்புகார் கொலு பொம்மைகள் கண்காட்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனையை பூம்புகார் விற்பனை நிலையம் துவங்கி உள்ளது.
இக்கண்காட்சியினை கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் வனிதா மோகன் துவங்கி வைத்தார்.



தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைதிறத்தொழில்களில் வளர்ச்சிக்கழகம் சார்பில் 44 ம் ஆண்டுகாலமாக இந்த விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி, விஜய தசமி, கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற பல்வேறு பண்டிகை காலங்களில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது.



அடுத்த மாதம் அக்டோபர் 2 தேதி துவங்க உள்ள நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் என்ற பெயரில் கண்காட்சி மற்றும் விற்பனையை இந்நிறுவனம் துவங்கி உள்ளது. இக்கண்காட்சி (13.10.2016) வரை தினசரி கலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது.



இக்கண்காட்சியில்,  மரபாச்சி பொம்மைகள், அஷ்டலஷ்மி, தசாவதாரம், ராமர் செட், கல்யாண செட், கடோத்கஜன் செட், பக்த பிரகலாத பட்டாபிஷேக செட், கிருஷ்ண லீலை செட், கோபியர் செட், உரியடி, உலகந்த பெருமாள், ஆழ்வார் செட்,ஆறுபடை வீடு, தக்ஷிணா மூர்த்தி, காமாக்ஷி பூஜை, கிணறு செட், சிங்கராஜா, ஒளவையர், பொங்கல் குதிரை செட், குருவாயூரப்பன், கச்சேரி செட், கீதோபதேசம், கொலு படிகள் மற்றும் பல்வேறு கொலு அமைக்க தேவையான பொருட்கள் இன்னும் ஏராளமானவை விற்பனைக்கு உள்ளன.
இக்கண்காட்சியில், சிறப்பு அம்சமாக ராமாயண வரலாற்று கதையை விளக்கும் வகையில் கொலு பொம்மைகள் மிக சிறப்பான முறையில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. 



இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கு 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி மூலம் ரூ.50 லட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது என மேலாளர் நரேந்திரபோஸ் தெரிவித்தார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...