பள்ளி மாணவர்களின் தோள் பையின் எடையை குறைக்க மத்திய இளநிலை பள்ளி கல்வி கழகம்(CBSE) முடி

மத்திய இளநிலை பள்ளி கல்வி கழகம் (CBSE) சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இளநிலை பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள் பள்ளிக்கு எடுத்து வரும் தோள் பையின் எடையை குறைக்க ஆசிரியர்களுக்கும் பெற்றவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சார்பில் வரவேற்ப்பு. 

இது குறித்து கோவை பிசியோதெரபி மருத்துவ சங்க செயலாளர் டாக்டர். ராஜேஸ் கண்ணா கூறியதாவது : 
இது தொடர்பாக முன்னரே பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கு மற்றும் மருத்துவ முகாம்  நடத்தியுள்ளோம். மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகு வலி, தோள் பட்டை வலி ஆகிய உடல் நல பாதிப்புகள் உண்டாகிறது. இதை தொடந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல்,சுவாச கோளறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல் போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக தோள் பையின் எடை  உடலின் எடையிலிருந்து அதிகபட்சம் 15 சதவீதத்திற்குள் தான்  இருக்க வேண்டும்.



பொற்றோர்கள் தோள் பை கடைகளில்  வாங்கும் போது தோளில் மாட்டும் பகுதி பட்டையாக உள்ளதா, இடுப்பு பகுதியை இணைக்கும் பட்டையுள்ளதா, புத்தகத்தை தனிதனியாக பிரித்து வைக்கும் வகையில் அதிக அளவில் அறைகள் உள்ளவா என பார்த்து வாங்க வேண்டும். அதேபோல் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் போது அன்றைய வகுப்புக்கு தேவையான புத்தகங்களை மட்டும் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். தேவையில்லாத புத்தகங்களை தவிர்பதன் முலம் தோள் பையின் எடையை குறைக்கலாம்.அதிக எடையுடைய புத்தகத்தை நடு முதுகு பகுதியில் படும்படியுள்ள பையின் அறையில் வைக்க வேண்டும் மற்ற புத்தங்களை அதன் எடைக்கு ஏற்றவாறு அடுத்தடுத்த அறைகள் வைக்க வேண்டும். பையின் பட்டை இரண்டு தோள்களிலும் சரியான உயரத்தில் உள்ளதா, இடுப்பு பகுதியின் பட்டை சரி யாக மாட்டபட்டுள்ளதா என சரிபாக்க வேண்டும். ஆசிரியர்கள் அன்றைய அனைத்து வகுப்பு பாடங்களையும்  ஒரே புத்தகத்தில் எழுத  மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.



பாட புத்தகங்களின் சுமையை குறைக்க கால அட்டவணையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். பள்ளி நிர்வாகம் மாணவர்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர் சரியான முறையில் சுத்திகரித்து தர ஏற்பாடு செய்ய வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பள்ளியிலே வழங்குவதன் மூலம் மாணவர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்து வருவதை தடுக்கலாம். அதே போல் ஓவ்வொரு மாணவருக்கும் அவர்கள் புத்தகங்களை பள்ளியிலேயே வைத்து பாதுகாப்பு கொள்ள புத்தக பாதுகாப்பு பெட்டி ஏற்படுத்தி கொடுக்கலாம். பொற்றோர்,ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரது ஒத்துழைப்பினால் மட்டுமே மாணவர்களுக்கு தோள் பையின் எடையை குறைத்து  அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை தடுக்க முடியும். அதேபோல் பள்ளி நிர்வாகம்  மாணவர்களின் உடலில் அக்கறை கொண்டு மருத்துவ முகாம்கள், மருத்துவ கருத்தரங்களை ஏற்பாடு செய்ய தர முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...