சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த  ஐந்து பேர் பலி.




பொள்ளாச்சி கோட்டாம்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் நடராஜ் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார்.  இவரது மகன் திருமுகருகன் மகள் ஜெயலட்சுமி மருமகன் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் குடும்பத்துடன் கடந்த 26 ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்றிரவு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். காரை ஆனந்த கிருஷ்ணன் ஓட்டி வந்துள்ளார்.

இன்று அதிகாலை பொள்ளாச்சி உடுமலை சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி எதிர்பாராத விதமாக விபத்து ஏற்ப்பட்டது. விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆனந்த கிருஷ்ணன் நடராஜ் இருவருவரும் உயிரிழந்தனர். திருமுருகன் ஜெயலட்சுமி  ஸ்ரீநிதி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமணையில் சிகிச்சைபாலனிற்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பிரியா, சிறுவன் தர்ஷன், சிறுமி சாகித்யா உள்ளிட்ட மூன்று பேர் கோவை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை ஓட்டி வந்த ஆனந்த கிருஷணன் தூக்கத்தில் இருந்தபடி, காரை ஓட்டியதால்  இந்த கோர விபத்து ஏற்ப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம்குறித்து கோமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரே குடும்பத்தைசேர்ந்த ஐந்து பேர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...