20 ஆண்டுகளுக்கு பின்பு உதகை அரசு பள்ளி மாணவர்கள் சந்திப்பு : கேக் வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட சம்பவம்

நீலகிரி : உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட சம்பவம் அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி : உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட சம்பவம் அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 



 

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த கக்குச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அக்கிராமம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 1998-ம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சந்தித்துக் கொண்டனர். அப்போது, அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் கோவை, ஒசூர், கரூர், மதுரை மற்றும் வெளி நாடுகளிலும் நல்ல பணிகளில் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.



இனி ஒவ்வொரு ஆண்டும் மே மாத்தில் ஒன்றிணைந்து ஆதரவற்ற அனாதை இல்லங்களில் ஒருநாள் சேவை செய்வதென உறுதி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...