982.5 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் : கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

கோவை : கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள், கடந்த 11 நாட்கள் மேற்கொண்ட சோதனையில், 982.5 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை : கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள், கடந்த 11 நாட்கள் மேற்கொண்ட சோதனையில், 982.5 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய 14 வகை பிளாஸ்டிக் கவர்கள், பொருட்களுக்கு தமிழக அரசு தடை வித்துள்ளது. இந்த தடையையடுத்து, கோவை மாநகராட்சி சார்பாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடவாத் உத்தரவில் பேரில், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் கோவை, காந்திபுரம், வடவள்ளி, சக்தி ரோடு, ஆர்.எஸ். புரம், பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை சோதனை மேற்கொண்டனர். இதில், 3 ஆயிரத்து 369 கடைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து 982.5 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த உரிமையாளர்களுக்கு ரூ. 4 லட்சத்து 73 ஆயிரத்து 950 அபராதமும் விதிக்கப்பட்டது.



இன்று ஒரே நாளில் மட்டும் 174 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 34 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை வைத்திருந்த உரிமையாளார்களுக்கு ரூ. 38 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...