மக்களின் நண்பனாக திகழ்ந்த காட்டு யானை விநாயகன்

கோவை : தடாகம் பகுதியில் இருந்து பிடித்து விட்டுச் செல்லப்பட்டாலும், கிராம மக்களின் நண்பனாக திகழ்ந்த காட்டு யானை விநாயகன் என்றும் கோவை மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

கோவை : தடாகம் பகுதியில் இருந்து பிடித்து விட்டுச் செல்லப்பட்டாலும், கிராம மக்களின் நண்பனாக திகழ்ந்த காட்டு யானை விநாயகன் என்றும் கோவை மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 

தடாகம் மற்றும் அதனையொட்டி உள்ள வனப்பகுதிகளின் அரசனாக திகழ்ந்து வந்த இரண்டு காட்டு யானைகளில் ஒன்று விநாயகனாகும். கோவை மாவட்ட வனச்சரகத்தில் இருக்கும் யானைகளுடன் ஒப்பிடுகையில் விநாயகன் உருவத்தில் இராட்சசன் போன்ற தோற்றத்தை உடையது. சுமார் 4.5 டன் எடையையும், மேலும், 9.5 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குள் உலா வரும் சின்னதம்பி, விநாயகன் காட்டு யானைகள் பொதுமக்களுக்கு மிகவும் பரீட்சியமானவை. 

பொதுவாக, கோவில் யானை என்றாலே, அதன் பக்கத்தில் செல்லும் போது அனைவருக்கும் ஒருவிதமான அச்சம் ஏற்படும். வனத்தில் ஒரு யானையை நேரில் பார்த்தால் சுமார் 50 அடி தள்ளிதான் நிற்பார்கள். ஆனால், விநாயகனைப் பொறுத்தவரையில், மிகப்பெரிய உருவத்தைக் கொண்டிருந்தாலும், பொதுமக்களுடன் நட்புறவையே பாராட்டி வந்தது. இதுவரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என யார் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஒரு புள்ளிவிவரமும் இல்லை. கற்களை வீசித் தாக்குதல் போன்ற செயல்களினால் துன்புறுத்திய நேரங்களைத் தவிர, அந்த யானை மனிதர்களுடன் வீட்டுப் பிராணிகள் போலத் தான் இருந்து வந்ததாகப் பெரும்பாலானோர் கூறுகின்றனர். 

அண்மையில், நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை விநாயகன், வீட்டில் சாக்கு மூட்டையில் வைக்கப்பட்டிருந்த அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இதனை அருகில் நின்று இளம்பெண் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். மனிதர்களிடம் அந்த யானை நண்பனாகவே இருந்து வந்ததற்கு இதுவே பெரிய சான்றாகும். 

இருப்பினும், பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படுத்தாவிட்டாலும், விளைநிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வந்த ஒரே விஷயம்தான் அதனை இங்கிருந்து அனுப்பி வைப்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இது தொடர்பாக விநாயகனைப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன்பேரிலேயே, பொதுமக்கள், வன அதிகாரிகள் மூலம் விரட்டப்படுகையில், வனத்துறை அதிகாரி வெங்கடேசன் என்பவர் விநாயகனின் தாக்குதலுக்கு பலியானார். 

"காட்டு யானைகளுக்கு விநாயகன் சிறந்த முன்னுதாரணமாகும். அதற்கு, உடல்நலம், மனநிலை மற்றும் மதநீர் சுரப்பது ஆகியவை நன்கு உள்ளது. அதன் பழக்கவழக்கங்களே பிரச்சனைகளுக்குக் காரணம். மனிதர்களிடம் நெருங்கிச் செல்வது மற்றும் விவசாய நிலங்களில் புகுவது போன்றவைகளால் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டு விட்டன," இவ்வாறு கூறினார் விநாயகனை பிடிக்கும் குழுவில் இடம்பெற்ற கால்நடை மருத்துவர் என்.எஸ். மனோகரன்.

தடாகம் பகுதிவாசி மாணிக்கராஜ் கூறுகையில், "விநாயகன் யானை பயிர்களை சேதப்படுத்தியது உண்மைதான். ஆனால், மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கொடுத்ததில்லை. வனஅதிகாரியை கொன்ற சம்பவம் மட்டுமே, அதனால் ஏற்பட்ட பெரிய இழப்பு. ஆனால், அது ஒரு விபத்துதான். மற்றபடி, விநாயகனை நெருக்கமாகப் பார்க்கும் பொதுமக்கள் அச்சமடைந்தது இல்லை. விநாயகன், சின்னதம்பி ஆகிய இரண்டு யானைகளும் தடாகம் பகுதியின் அரசர்கள். வனத்தையும், எங்களையும் பாதுகாப்பதற்காகத்தான் இரவு பகலாக அவை உலா வந்தன," என்றார். 

தற்போது விநாயகன் முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டிருந்தாலும், மதுக்கரை மகாராஜனைப் போன்று, தடாகத்திற்கு விநாயகன் என்றும் அரசன் தான், என பொதுமக்கள் உருக்கமாகத் தெரிவிக்கின்றனர். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...