மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது

கோவை : மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான 11 -வது புத்துணர்வு முகாம் நேற்று காலை பவானியாற்று நதிக்கரையில் தொடங்கியது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான 11 -வது புத்துணர்வு முகாம் நேற்று காலை பவானியாற்று நதிக்கரையில் தொடங்கியது. 

தொடர்ந்து 48 நாட்கள் நடக்கவுள்ள இந்த முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஶ்ரீனிவாசன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் செவ்வூர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். யானைகளின் புத்துணர்வுக்காக நடத்தப்படும் இந்த முகாமிற்காக ரூ.1.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த முகாமில், 28 யானைகள் வெவ்வேறு ஆலயங்களில் இருந்தும் மடங்களில் இருந்தும் வந்து பங்கேற்றுள்ளன. அதில் 22 யானைகள் தமிழகத்தைச் சேர்ந்தது. மற்றொன்று பாண்டியைச் சார்ந்தது. மீதமுள்ள 4 யானைகளும் மடத்தைச் சேர்ந்தவை ஆகும்.

சிறப்பம்சமாக, முகாமில் போன வருடத்தில் இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் காட்டு யானைகள் முகாமில் நுழையாமல் இருக்க 4 அடுக்கு வேலி அமைத்திருந்தனர். அதை மாற்றி இந்த ஆண்டு 5 அடுக்கில் புதுப் பொலிவுடன் பாதுகாப்பு வேலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



இதுகுறித்து வனத்துறை அதிகாரி எஸ்.செல்வராஜ் கூறும்போது ஆறு அடுக்குகளாக அமைக்கப்பட்ட வேலியுடன் இரும்பு தகடுகள், சூரியசக்தி மின்தகடுகள், மின்வேலி, வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள், தொடர் பல்புகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

"இந்த முறை முகாமில் அறிமுகப்படுத்தப்பட்ட 6 -வது பாதுகாப்பு அடுக்கு காட்டு விலங்குகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகாமின் வேலியில் ஆறாவது அடுக்காகச் சுற்றிலும் சுடர் விளக்குகளைப் பொருத்தியிருக்கும் அமைப்பு காட்டு யானைகளுக்கு நெருப்பு போல காட்சியளிக்கும். எனவே, அவை முகாமின் வேலியை நெருங்கி வராது. 

மேலும், எந்தச் சூழலிலும் முகாமில் காட்டு யானைகள் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன," என்றார்.



 

இதற்கிடையில், 40 வனத்துறை அதிகாரிகள் முகாமின் பாதுகாப்புக்காக அப்பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை மற்றும் மாலை இருவேளைகளில் அதிகாரிகளுக்கு முகாமிற்கு உள்ளே வெளியே எனப் பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியைச் சுற்றி ரோந்தில் ஈடுபடும் காவல் அதிகாரிகளிடம் , காட்டு யானைகளை விரட்ட வெடி பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோக, 70 இந்து அறநிலையத்துறை ஊழியர்களும் முகாமின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த முகாமினால் காட்டு யானைகள் கிராமத்தில் நுழைந்து விளைநிலங்களைச் சேதப்படுத்துகின்றன. எனவே, புத்துணர்வு முகாமை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேக்கம்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...