கோவை : கோவையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடைபெறும் ஏற்பாடுகளை நிறுத்தக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : கோவையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடைபெறும் ஏற்பாடுகளை நிறுத்தக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் நீலிகோணம்பாளையம், திருவள்ளுவர் நகர், வசந்தா நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தற்போது திருவள்ளுவர் நகர் பகுதியில், புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதிக்கருகில் அதனைத் திறக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "தற்போது எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் இல்லாமல் பொதுமக்கள் இருந்து வருகிறோம். இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால், ஏற்கனவே, இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறாக அமையும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாக வாய்ப்பாகும். எனவே, இதனைத் திறக்க அனுமதிக்கக்கூடாது," என்றனர்.