நீலகிரி : சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் டூர் ஆப் நீல்கிரிஸ் சாகச சைக்கிள் பயணம் இன்று உதகையில் தொடங்கியது.
நீலகிரி : சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் டூர் ஆப் நீல்கிரிஸ் சாகச சைக்கிள் பயணம் இன்று உதகையில் தொடங்கியது.
ரைடு ஏ சைக்கிள் பவுண்டேஷன் சார்பில் ஆண்டு தோறும் சைக்கிள் ஓட்டுநர் வீரர்களைக் கொண்டு சாகச சைக்கிள் பயணம் நடத்தப்படுகிறது. இந்தச் சாகச பயணத்தில் 17 பெண்கள் உட்பட 110 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன், டென்மார்க், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 24 பேர் பங்கேற்றனர்.
கர்நாடகா மாநிலம் மைசூரில் தொடங்கிய இப்பயணம் மடிக்கேரி வழியாகக் கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி வழியாகத் தமிழகம் எல்லையான முதுமலை வழியாக நேற்று முன்தினம் உதகை வந்தடைந்தது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய 29 சர்வேதச வீரர்கள் உட்பட 110 வீரர்கள் இந்த சாகச பயணத்தில் பங்கேற்றனர். இதில் சுமார் 12கி.மீ தொலைவுள்ள கல்லட்டி மலைப்பாதை பயணத்தில் 1230 மீ உயரத்துக்கு 36 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து உதகை தொட்டபெட்டா பகுதிக்குள் வந்தடைந்தனர்.
11 -வது ஆண்டாக நடைபெறும் இந்த மலையேற்ற சைக்கிள் சாகச பயணத்தை இன்று உதகையில் சிறப்பு மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் பாபு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன் முழு நோக்கமே சைக்கிளின் மகத்துவம் குறித்து மக்களிடம் சொல்லுவதே ஆகும். மேலும், சைக்கிள் பயணத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே ஆகும். முக்கியமாக, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிக்க சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என்பது இந்த சாகச பயணத்திற்குக் காரணமாகும்.
உதகை தொட்ட பெட்டா பகுதியில் தொடங்கிய சாகச சைக்கிள் பயணம் கோத்தகிரி கட்டபெட்டு வழியாக, வெலிங்டன்கன் டோன்மெண்ட், குன்னூர், சேலாஸ், குந்தா, மஞ்சூர், லவ்டேல் வழியாக சுமார் 82 கி.மீ தூரம் பயணித்து மீண்டும் உதகையில் நிறைவடைகிறது. அதன் பிறகு நாளை மீண்டும் உதகையில் இருந்து சைக்கிள் சாகசபயணம் தொடங்கி நடுவட்டம், கூடலூர் வழியாக மடிக்கேரி, சுல்தான்பத்தேரி வழியாக கர்நாடகா மாநிலம் கல்பெட்டா பகுதியில் முடிவடைகிறது.