நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பொழியும் உறைபனியால் தேயிலை செடிகளில், தேயிலை கொழுந்துகள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மலைமாவட்டமான நீலகிரியில் கடும் குளிர் நிலவி வந்த சூழலில், தற்போது தொடர்ந்து உறைபனி பொழியத் தொடங்கியுள்ளது.குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரபகுதிகளில் தொடர்ந்து உறைபனி அடித்து வருவதால் தேயிலை செடிகளின் கொழுந்துகள் கருகி தேயிலை விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குன்னூர் அருகேயுள்ள கேத்தி, பாலடா, காட்டேரிவில்லேஜ், கொல்லிமலை, கரும்பாலம், கிளிஞ்சடா, தூதூர்மட்டம் சேலாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகலில் கடும் வெயிலும் மாலையில் இருந்து குளிர்காற்றும்,அதிகாலையில் பனிப்பொழிவு என சீதோசன மாறியுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதையடுத்து, ஒருசில விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களைப் பனியில் இருந்து பாதுகாக்கும் வகையில் எடை குறைவான தாகைகளை செடியின் மீது பரப்பிவிட்டு தேயிலை செடிகளை பாதுகாத்து வருகின்றனர். இனிவரும் நாட்களில் உறைபனி பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தேயிலை செடிகள் அதிகளவில் கருகி அதன் மகசூலும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே, பசும் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் பாதித்து வரும் நிலையில் தேயிலை விவசாயிகளுக்கு இந்த சீதோஷனநிலை மாற்றத்தால் தேயிலை செடிகள் கருகி வருவது மற்றுமொரு சோகமாகும்.