நீலகிரி : குன்னூரில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் மினி பேருந்து உரிமையாளர்கள் காட்டிக் கொடுத்த ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்தால் போக்குவரத்து ஆய்வாளர் நல்லதம்பியை முற்றுகையிட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நல்லதம்பி இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது சில மினிபஸ் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டிய ஆட்டோக்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்ததோடு, தகுதிச்சான்று ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அனைத்து ஸ்டேண்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களும் ஒன்று சேர்ந்து போக்குவரத்து ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பித்து அருகே உள்ள தேநீர் கடைக்குள் தஞ்சம் புகுந்தார். இந்தத் தகவல் அறிந்து மேல் குன்னூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின் போக்குவரத்து ஆய்வாளர் நல்லதம்பியை பத்திரமாக மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். இதில் மினி பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், தற்போது விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்வதாகவும் காவல்துறையினர் கூறிதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தச் சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.