விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கைத் தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு

கோவை : டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரணை செய்யவும், 6 மாத காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரணை செய்யவும், 6 மாத காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கை டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை செய்தார். இதற்கிடையில், திடீரென டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. 

இதுதொடர்பாக, சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து, விசாரணை நடத்திய சிபிஐ தனிப்பட்ட காரணங்களினால் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாகவும், குற்றவாளிகள் யாரும் இல்லை என்பதால் இவ்வழக்கைக் கைவிடுவது எனவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. 



இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக்கூறி விஷ்ணுபிரியா தந்தை ரவி ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார். மேலும், விஷ்ணுபிரியா என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை சிபிஐ கண்டறியவில்லை எனவும், காவல் துணை ஆணையர் மகேஸ்வரி, காவல் ஆய்வாளர் சந்திரகலா, துணை ஆணையர் இனிகோ திவ்யன், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி முத்தமிழ் முதல்வன், சேவியர் ஃபிரான்ஸிஸ் பெஸ்கி, விஷ்ணுபிரியா பெற்றோர்களான ரவி,கலைச்செல்வி ஆகிய 7 பேரையும் விசாரிக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை கைவிடுவது தொடர்பான சிபிஐ அறிக்கையைத் தள்ளுபடி செய்த நீதிபதி நாகராசன், இவ்வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரணை செய்யவும், 6 மாத காலத்திற்குள் இறுதிஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார். 

அந்த விசாரணையில் விஷ்ணுபிரியா செல்போன் ஆடியோ, முகநூல், வாட்ஸ் ஆப் உரையாடல், லேப்டாப் ஆகியவற்றை ஆராய வேண்டும் எனவும் குறிப்பாக எஸ்.பி.செந்தில்குமார் - விஷ்ணுபிரியா செல்போன் உரையாடலை ஆராய வேண்டும், தலைமை காவலர் ரவி உள்ளிட்டோரிடம் முறையாக விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட 12 நிபந்தனைகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி, எஸ்.பி.செந்தில்குமார் தொல்லை காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் எனவும், விஷ்ணுபிரியா மரணத்திற்கு நீதி கிடைக்க கடைசி வரை போராடுவேன் எனவும் கண்ணீர் மல்க கூறினார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...