திருப்பூரில் ஆபாசத் திரைப்பட சுவரொட்டிகளைக் கிழித்தும் மை பூசியும் மாதர் சங்கத்தினர் போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் 'இவனுக்கு எங்கேயோ மச்சம்' என்ற திரைப்படத்தினை ஆபாசத் திரைப்படம் எனக் கூறி மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் 'இவனுக்கு எங்கேயோ மச்சம்' என்ற திரைப்படத்தினை ஆபாசத் திரைப்படம் எனக் கூறி மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏ.ஆர் மகேஷ் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து வெளிவந்த திரைப்படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது . இதையடுத்து, திரைப்படம் ஆபாசம் மிகுந்ததாக இருப்பதாகவும் அந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் ஆபாச போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இந்த போராட்டத்தில் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் திரையரங்கை முற்றுகையிட்டனர். மேலும், திரையரங்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த ஆபாச போஸ்டர்கள் மீது கருப்பு மையினை பூசியும் , பேனர்களைக் கிழித்தும் போராட்டத்தினை தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து மாதர்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் அடுத்த காட்சி முதல் ரத்து செய்ய திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

இந்தப் பேச்சு வார்த்தையினால் மாதர் சங்கத்தினர் போராட்டத்தைக் கைவிட்டனர். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...